லங்கா பிரிமியர் லீக் (LPL) போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இன்று (05) இலங்கை கிரிக்கெட் பேரவை (SLC) அறிவித்துள்ளது.
இதேவேளை, 2024ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுவதற்கு யோசனை முன்வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தம்புள்ள தன்டர்ஸ் (Dambulla Thunders) அணியின் உரிமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான தமீம் ரஹ்மான் ( Tamim Rahman) கைது செய்யப்பட்டிருந்தார்.
சிறிலங்காவை எதிர்கொள்ளும் மேற்கிந்திய மகளிர் அணி
அணியின் எதிர்காலம்
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ஐ.பி.ஜி (IPG) நிறுவனங்கள் இணைந்து தம்புள்ள தண்டர்ஸ் அணியின் ஒப்பந்தத்தினை உடனடிடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கியிருந்தன.
இதனடிப்படையில், அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கலிபோர்னியாவின் (California) லொஸ்ஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட முன்னணி பொறியியல் ஆலோசனை நிறுவனமான “Sequoia Consultants, Inc“ எனும் நிறவனம் இந்த வருடம் நடைபெறவுள்ள எல்.பி.எல் தொடரில் தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வருட லங்கா பிரிமியர் லீக் தொடரில் தம்புள்ளை அணி ்“தம்புள்ள சிக்ஸர்ஸ்” என்ற புதிய பெயருடன் விளையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்: வரலாற்றில் முதல் முறையாக மாபெரும் பரிசுத் தொகை
தங்கப்பதக்கங்களை சுவீகரித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |