Home சினிமா அந்த வீடியோவை உடனே நீக்குங்க.. கொந்தளித்த ஆலியா பட்

அந்த வீடியோவை உடனே நீக்குங்க.. கொந்தளித்த ஆலியா பட்

0

ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவர் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு ராஹா என்கிற மகளும் இருக்கிறார்.

மும்பையில் கபூர் குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் பிரம்மாண்டமாக ஆறு அடுக்கு சொகுசு மாளிகையை தற்போது ரன்பீர் மற்றும் ஆலியா பட் இருவரும் சேர்ந்து கட்டி வருகிறார்கள்.

250 கோடி ரூபாய் செலவில் அந்த வீட்டை அவர்கள் கடந்த ஒரு வருடமாக கட்டி வருகின்றனர். விரைவில் அந்த வீட்டில் அவர்கள் குடியேறுவார்கள் என தெரிகிறது.

தங்களது மகள் ராஹா பெயரில் அந்த வீட்டை பதிவு செய்ய அவர்கள் இருவரும் முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

வீடியோவை நீக்குங்க.. கொந்தளித்த ஆலியா பட்

இந்நிலையில் தாங்கள் கட்டி வரும் சொகுசு வீட்டின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக இருக்கிறது. இது Privacyயை பாதிக்கிறது எனக் குறிப்பிட்டு ஆலியா பட் ஆவேசமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

மும்பையில் இடம் குறைவாக இருக்கிறது என்பது உண்மைதான், ஒரு வீட்டின் ஜன்னல் அடுத்த வீட்டை பார்த்தபடி தான் இருக்கும். ஆனால் அதற்காக வீடியோ எடுத்து அதை வைரலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியிருக்கும் அவர், அந்த வீடியோக்களை உடனே நீக்கும்படி கேட்டு இருக்கிறார்.

அவரது பதிவு இதோ.
 

NO COMMENTS

Exit mobile version