Home இலங்கை அரசியல் திம்புலாகலையில் வேற்றுக்கிரக வாசிகள் வருகை குறித்து பிரதியமைச்சர் டீ.பி.சரத் வழங்கிய யோசனை

திம்புலாகலையில் வேற்றுக்கிரக வாசிகள் வருகை குறித்து பிரதியமைச்சர் டீ.பி.சரத் வழங்கிய யோசனை

0

பொலன்னறுவை – திம்புலாகலைக்கு வேற்றுக்கிரக வாசிகள் வருகை தருவதை பிரபல்யப்படுத்தி, சர்வதேச சுற்றுலாத்தலமாக மாற்ற முடியும் என்று வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் ​போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வேற்றுக் கிரகவாசிகள்

அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், பொலன்னறுவை திம்புலாகலைக்கு வேற்றுக் கிரகவாசிகள் வந்து போவதாக நீண்டகாலமாக ஒரு நம்பிக்கை உள்ளது.

அது தொடர்பில் சர்வதேசம் வரை ஒரு செய்தி பரவியுள்ளது.

இது குறித்த விஞ்ஞானபூர்வமான விடயங்களை ஆராய்ந்து, அதனை சர்வதேச மட்டத்தில் பிரபல்யப்படுத்தினால், சுற்றுலாப் பயணிகளை அங்கு கவர்ந்திழுக்கலாம்.

அதன் மூலம் திம்புலாகலையை ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கலாம் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version