Home இலங்கை சமூகம் வீட்டு கூரையில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் கடற்படையினரால் மீட்பு

வீட்டு கூரையில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் கடற்படையினரால் மீட்பு

0

செட்டிகுளம், கந்தசாமி நகர் பகுதியில் வெள்ளம் காரணமாக வீட்டின் கூரையில்
இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடற்படையினரால் பாதுகாப்பாக
மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா , செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு
பேர் வீட்டை சூழ்ந்த கடும் வெள்ளத்தின் காரணமாக வீட்டின் கூரையில் இருந்த
நிலையில் அவர்களை மீட்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ம.ஜெகதீஸ்வரன் விமானப்படை உதவியுடன் குறித்த குடும்பத்தினை
மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

 உலங்குவானூர்தி செல்ல முடியாத நிலை 

சீரற்ற காலநிலை காரணமாக
உலங்குவானூர்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த ஆறு பேரும் கடற்படையினுடைய உதவியுடன் தேசிய மக்கள் சக்தி
நாடாளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் நேரடியாக சென்று இரண்டு கட்டமாக படகு
மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரையும் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version