Home இலங்கை சமூகம் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் அதிகரிப்பு

அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் அதிகரிப்பு

0

அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. 

கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தமானி அறிவிப்பு

அந்த வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வருடாந்திர கலால் வரி, பாதுகாப்பு வைப்புத் தொகை மற்றும் தொழில்துறை அணுகலுக்கான ஒரு முறை கட்டணம் ஆகியவை அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version