Home இலங்கை சமூகம் மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கு வெளியான அறிவித்தல்

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கு வெளியான அறிவித்தல்

0

மேல் மாகாணத்தில் (Western Province) உள்ள வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்காக இயங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்

அபராதம் செலுத்தாமல் வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை பெறக்கூடிய இறுதி நாளாக 20ம் திகதி காணப்பட்டால் அதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு குறித்த சாளரங்கள் திறக்கப்படும் முதல் நாளே அபராதம் செலுத்தாமல் அனுமதிப் பத்திர கட்டணம் செலுத்தி வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை பெற வாய்ப்பு வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி முறையின் மூலம் வருமான அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மேல் மாகாண தலைமைச் செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version