Home இலங்கை சமூகம் கிழக்கில் தமிழர் பிரதேசத்தை அழிக்கும் மக்கள் பிரதிநிதிகள்: பொது அமைப்புகள் குற்றச்சாட்டு

கிழக்கில் தமிழர் பிரதேசத்தை அழிக்கும் மக்கள் பிரதிநிதிகள்: பொது அமைப்புகள் குற்றச்சாட்டு

0

எமது வாக்குகளினால் மக்கள் பிரதிநிதிகளானவர்கள் இன்று வாகரை பிரதேசத்தினை அழிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும் வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(28) காலை மட்டக்களப்பில் உள்ள ஆளுனரின் அலுவலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்றது.

வெளிநாடுகளுக்கு விற்கப்படும் விவசாய காணிகள் : திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

மக்களின் வாழ்வாதாரம் 

வாகரை பகுதியில் இல்மனைட் அகழ்வு மற்றும் இறால் பண்ணை திட்டங்களுக்கு அனுமதி வழங்கவேண்டாமென கோரி வாகரை பிரதேச மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த திட்டங்கள் ஊடாக வாகரை பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் இந்த திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த போராட்டங்களில் ஈடுபடும் வாகரை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆளுனர் கலந்துரையாடினார்.

பாலத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற அதிபர் பைடன் : அமெரிக்க மக்கள் அதிர்ச்சி

பொது அமைப்பு

தமது பகுதிகளுக்கு இவ்வாறான திட்டங்கள் பொருத்தமற்றவை எனவும் அவை தொடர்பில் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும் எவ்வாறாயினும் அதனையும் மீறி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமானால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இங்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டது.

வாகரை பிரதேசத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாதெனவும் அவ்வாறான மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போமெனவும் பொது அமைப்புகள் தெரிவித்தன.

இறால் பண்ணை வளர்க்கும் பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள்,விவசாய நிலங்கள்,கண்டல்தாவரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

யாழில் வீடொன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

தமிழ் தேசிய கூட்டமைப்பு 

காட்டை அண்டிய பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படுகின்றன அத்தோடு அதனை அண்டிய சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன.

இவை இல்லாமல் போனால் வாகரை பகுதி மக்களின் இருப்புகள் இல்லாமல்போகும் நிலையேற்படும். வாகரை பிரதேச மக்களின் இருப்பினை மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சிதைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் இந்த இறால் பண்ணை திட்டத்தினை நிறுத்துவதற்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களுக்கு எதிரான மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்திற்கும் ஆதரவளிக்கப்போவதில்லையெனவும் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து செயற்படுவேன் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை எந்த தடைகள் வந்தாலும் முன்கொண்டு செல்வேன் எனவும் மக்களுக்கு தீங்கான எந்த திட்டங்கள் வந்தாலும் அதனை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையெனவும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version