Home இலங்கை சமூகம் யாழில் வீதி திருத்தம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழில் வீதி திருத்தம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு

0

சுழிபுரம் இறங்குதுறையில் இருந்து எடுத்த மண்ணை மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கு கொடுக்காமல் இராணுவத்தினருக்கு கொடுத்ததாக சுழிபுரம் பொதுமகன்
ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு
கூட்டமானது இன்றையதினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபொதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாவனைக்கு

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

சுழிபுரம் கடல் இறங்குதுறையானது அண்மையில் ஆழப்படுத்தப்பட்டது.

இதன் போது
அங்கு பெறப்பட்ட மண்ணை எமது பகுதிகளில் உள்ள வீதிகளுக்கு போட்டு வெள்ளம்
தேங்காமல் செய்வதற்கு அனுமதி கோரினோம். இருந்தாலும் எமக்கு அனுமதி
வழங்கப்படவில்லை.

ஆனால் கரையோர பகுதி இராணுவத்திற்கு அதற்கு அனுமதி
வழங்கப்பட்டது.

எங்களது பகுதிகளில் உள்ள எத்தனையோ வீதிகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கூட எத்தனை தடவை வெள்ளத்துக்குள் வந்து
பார்வையிட்டுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் நாங்கள் அந்த மண்ணை
எடுப்பதற்கு அனுமதி கோரி இருந்தோம்.

குறைந்தது 13 அல்லது 14 வீதிகள் இவ்வாறு காணப்படுகின்றன.

எமது மக்களின்
பாவனைக்கு அந்த மண்ணை அதிகாரிகள் வழங்காததற்கான காரணம் என்ன என அவர் கேள்வி
எழுப்பியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version