Home இலங்கை சமூகம் கொழும்பு கடலில் நீராடியவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

கொழும்பு கடலில் நீராடியவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

0

கொழும்பு பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 12 பேர் ஜெல்லிமீன்களுடன் தொடர்பு கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த குழுவினர் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்பட்டுள்ள அறிகுறிகள்

இந்த மீன் இனத்தை தொட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடம்பில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன.

ஜெல்லிமீன்களை, மே மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் ஆழமற்ற நீரில் காணலாம்.

 கவனமாக இருக்க வேண்டியது அவசியம்

இதனால், கடல் அலைகளில் மிதக்கும்போதும், டைவிங் செய்யும்போதும், கடற்கரையில் சுற்றும்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version