Home இலங்கை சமூகம் மக்களுக்கான கொடுப்பனவுகள்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

மக்களுக்கான கொடுப்பனவுகள்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

0

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் நிரந்தர வேலைவாய்ப்பை வலியுறுத்தி வீதிக்கிறங்கிய பட்டதாரிகள்

கௌரவமான தொழில் 

எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் மேற்படி விடயம் குறித்த யோசனை முன்மொழியப்பட உள்ளது எனவும் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்தோடு கூலித்தொழிலாளி என்ற பெயர் மாறுவதுடன் கௌரவமான தொழில் அவர்களுக்கு கிடைப்பதோடு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச மற்றும் தேசிய தலைவர்கள் பலர் எதிர்வரும் மே தினத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்களென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான ஐயப்பாடு காரணமாக நேரடியாக இணைந்து கொள்வதற்கு தயக்கம் காட்டிய போதிலும் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம்… எங்கு உள்ளார் தெரியுமா!

இலங்கையில் குறைவடைந்த தொழிலாளர் எண்ணிக்கை: மத்திய வங்கியின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version