அமலாபால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வந்தவர் திருமணம், குழந்தை என ஆன பின் படங்கள் பக்கம் அவ்வளவாக காணவில்லை.
அவ்வப்போது தனது கணவர், குழந்தை உடன் வெளிநாட்டில் வலம் வரும் போட்டோஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று.
எல்லை மீறிவிட்டார்.. இயக்குநரை விளாசிய நடிகை திவ்ய பாரதி!
என்ஜாய் செய்கிறார்!
இந்நிலையில், இவர்கள் குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அங்கு ஆமைகளுடன் நீந்தியது, மீன்களுடன் நீந்தியது தொடர்பான வீடியோக்களை அமலாபால் பகிர்ந்துள்ளார்.
அதேபோல் மான்கள், முதலை மற்றும் சிறுத்தையைப் பார்த்தது, தொடர்பான வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
