சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட் ஆன படம் அமரன். 300 கோடிக்கும் மேல் வசூலித்து புது சாதனை படைத்து இருக்கிறது இந்த படம்.
இந்நிலையில் நடிகர் விஜய் அமரன் பட இயக்குனரை அழைத்து பாராட்டி இருக்கிறார். அந்த சந்திப்பின் போது எடுத்த போட்டோவை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்டு இருக்கிறார்.
இயக்குனர் பதிவு
12 வருடங்களுக்கு முன் விஜய் உடன் எடுத்த போட்டோவை பதிவிட்டு “12 வருடம், 2 மாதம், 1 நாள், 15 மணி நேரம் கழித்து விஜய் உடன் மீண்டும் போட்டோ எடுத்திருக்கிறேன்” என குறிப்பிட்டு இருக்கிறார்.
வைரலாகும் பதிவு இதோ..
Source: https://cineulagam.com/article/amaran-director-rajkumar-periasamy-meets-vijay-1732664937
