Home சினிமா 2 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

அமரன் 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு அயலான் படம் வெளிவந்த நிலையில், தீபாவளிக்கு அமரன் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு அமரனுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் 

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்திருந்தார். மேலும் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள அமரன் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அமரன் படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இரண்டே நாட்களில் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், கண்டிப்பாக இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடியை அமரன் படம் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/amaran-movie-2-days-box-office-1730516054

NO COMMENTS

Exit mobile version