Home சினிமா கோவிந்தா பாடல்.. சந்தானத்திடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்

கோவிந்தா பாடல்.. சந்தானத்திடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்

0

நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தில் கவுதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

இந்த படத்தை நடிகர் ஆர்யா தான் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் வரும் கிஸ்ஸா பாடலில் திருமலை திருப்பதியின் ‘ஸ்ரீனிவாச கோவிந்தா’ பாடல் வரிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

100 கோடி கேட்டு நோட்டீஸ்

ஜனசேனா கட்சியின் திருப்பதி நிர்வாகி கிரண் ராயர் என்பவர் தற்போது இந்த பாடல் பற்றி போலீசில் புகார் அளித்து இருக்கிறார். அந்த பாடலை படத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

அந்த பாடலை நீக்க சந்தானம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் 100 கோடி ரூபாய் கேட்டு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version