Home சினிமா மாபெரும் வெற்றியடைந்த அமரன்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

மாபெரும் வெற்றியடைந்த அமரன்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

0

அமரன்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் அமரன்.

கமல் ஹாசன் தயாரித்த இப்படம், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடித்திருந்தார். இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இதுவே ஆகும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில், 21 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமரன் படம் உலகளவில் இதுவரை ரூ. 305 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் ரூ. 147 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/amaran-movie-21-days-box-office-collection-1732171349

NO COMMENTS

Exit mobile version