Home இலங்கை சமூகம் பதினைந்து கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்: ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை

பதினைந்து கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்: ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை

0

சத்திரசிகிச்சையொன்றின் ஊடாக தாயொருவரின் கர்ப்பப்பையில் இருந்து பதினைந்து கிலோ எடையுள்ள கட்டியொன்று அகற்றப்பட்டுள்ளதாக மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் சமந்தா சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவருக்கே நேற்று காலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தாய் நலமுடன் இருப்பதாகவும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சத்திரசிகிச்சை

மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் சமந்த சமரவிக்ரம, இரண்டு உதவி வைத்தியர்கள், ஒரு மயக்கவியல் நிபுணர் மற்றும் மூன்று தாதிகள் அடங்கிய குழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல வருடங்களாக வயிறு வீங்கி வந்தமையினால், பல்வேறு வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்று வந்த பெண் ஹம்பாந்தோட்டை மகப்பேறு மருத்துவ நிபுணரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இதன்போது பதினைந்து கிலோ எடையுள்ள கட்டி கண்டறியப்பட்டு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்திய நிபுணர் டாக்டர் சமந்தா சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version