Home இலங்கை குற்றம் அம்பலாங்கொடை துப்பாக்கி சூட்டு சம்பவம் – பெண் ஒருவரும் கைது

அம்பலாங்கொடை துப்பாக்கி சூட்டு சம்பவம் – பெண் ஒருவரும் கைது

0

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இடம்பெற்ற, அம்பலங்கொடை மோதர தேவாலய நிர்வாக
குழுவின் தலைவர் வருசவிதான மிரந்தவின் கொலைக்கு உதவிய சந்தேகத்தில் பெண்
ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் அனுர புஸ்பகுமார
அல்லது பது மீயா என்பவரின் மனைவியே கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிர விசாரணை 

அந்தப் பெண் மற்றும் மூன்று பேர் பொலன்னறுவையில் இன்று பொலிஸாரால் கைது
செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மூவரும் பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து
விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக இந்த கொலை தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version