Home இலங்கை சமூகம் கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது

கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது

0

கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு 2025ஆம் ஆண்டுக்கான
ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
தலைமையில் இன்று (23.10.2025) முற்பகல் 10 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில்
இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இதே துறையில் இப்பாடசாலை மெரிட் சான்றிதழ்களை
பெற்றுக்கொண்ட நிலையில் இந்த ஆண்டு விருது கிடைத்துள்ளது.

விருதுகள் 

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த
தொழில்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள்,
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதியளித்த பாடசாலைகள் ஆகியவற்றின் சமூக
பங்கேற்பை அங்கீகரிக்கும் வகையில் ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள்
திட்டம் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையால் வடிவமைக்கப்பட்டு 2011ஆம்
ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 11ஆவது விருது வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாணத்தில்
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தை சேர்ந்த அம்பாள்குளம் விவேகானந்த
வித்தியாலயத்திற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version