Home இலங்கை சமூகம் மின்சார சட்டமூல திருத்தம்: நீடிக்கப்பட்ட மக்களுக்கான வாய்ப்பு

மின்சார சட்டமூல திருத்தம்: நீடிக்கப்பட்ட மக்களுக்கான வாய்ப்பு

0

மின்சார சட்டமூலத்தில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கால அவகாசமானது, பெப்ரவரி 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு அறிவித்துள்ளது.

சட்டமூல திருத்தம்

அதன்படி, தொடர்புடைய எழுத்துப்பூர்வ கருத்துக்களை அந்த திகதியில் அல்லது அதற்கு முன் தபால் மூலம் கொழும்பு 03, காலி வீதி, எண். 437 இல் அமைந்துள்ள எரிசக்தி அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கலாம்.

இதேவேளை, மின்சாரச் சட்டமூல திருத்தம் தொடர்பான அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், https://powermin.gov.lk/ என்ற இணையதளம் மூலம் அதனை பரீசிலிக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.     

NO COMMENTS

Exit mobile version