Home அமெரிக்கா காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமான அமைப்பு: அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமான அமைப்பு: அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

0

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு காரணமான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்(TRF) அமைப்பை பயங்கரவதாக அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, குறித்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றது.

அதிகாரபூர்வ அறிவிப்பு 

இந்நிலையிலேயே, குறித்த அமைப்பை தடை செய்வதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version