Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேவேளையில், இலங்கைப் பிரஜைகளுக்கு, அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலையே, தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) எக்ஸ் தள பதிவு ஒன்றில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
We welcome the Election Commission announcement of September 21 presidential elections, affirming Sri Lanka’s longstanding commitment to democracy. We look forward to free and fair elections that empower Sri Lankan citizens to determine their future.
— Ambassador Julie Chung (@USAmbSL) July 26, 2024
இலங்கையின் ஜனநாயகத்திற்கான நீண்டகால உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் செப்டம்பர் 21ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை அமெரிக்கா வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.