அமெரிக்கன் ஏர்லைன்ஸ்(American Airlines) விமானம் நடுவானில் பறந்த கொண்டிருந்த போது திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானம் கடந்த டிசம்பர் 7ஆம் திகதி பயணிகளுடன் டல்லாஸில் இருந்து மினியாபோலிஸை நோக்கி பயணித்துள்ளது.
இதன்போது, விமானம் நடுவானில் பறந்த கொண்டிருந்த வேளை பயணிகளின் இருக்கைக்கு அடியில் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ள நிலையில், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தண்ணீர் கசிவு
இது குறித்து விமானப் பணிப்பெண் ஆய்வு செய்த போது, விமானத்தில் உள்ள ஒரு கழிவறையிலிருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தால் பயணிகள் தங்கள் கால்களை மேலே தூக்கி, கீழே இருந்த தங்களது பொருட்களை அப்புறப்படுத்தி பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.