Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை கைது!

0

குஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற அமெரிக்க பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 23 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை கடத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வைத்திருந்த 23 கிலோ கிராம் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணைகள் 

இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 230 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது, சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/american-citizen-arrested-at-katunayake-airport-1744722658

NO COMMENTS

Exit mobile version