Home இலங்கை குற்றம் அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்தவர் அதிரடியாக கைது

அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்தவர் அதிரடியாக கைது

0

பொலிஸ் மா அதிபரின் அழைப்பின் பேரில் பொலிஸ் அதிகாரிகளுக்கு விரிவுரை வழங்குவதற்காக இலங்கை வந்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்தபோது, ​​சட்டவிரோதமாக 17 தோட்டக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரியை, 500,000 ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார நேற்று உத்தரவிட்டார்.

அமெரிக்க பொலிஸ் அதிகாரி

அமெரிக்க பொலிஸ் அதிகாரியின் கைரேகைகளை எடுத்து அறிக்கை கோருமாறு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

சந்தேக நபர் பொலிஸ் மா அதிபரின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வந்ததாகவும், தற்செயலாக தோட்டக்களை வைத்திருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நடந்த தவறு தொடர்பாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இராஜதந்திர உறவுகள்

மேலும் அந்த உண்மைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்து கவனம் செலுத்திய நீதவான், பிணை உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேக நபர் விசாரணைகள் முடியும் வரை வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவையும் நீதவான் பிறப்பித்தார்.

NO COMMENTS

Exit mobile version