Home சினிமா மருமகள் ஐஸ்வர்யா ராய் பெயரை கூட சொல்லாத அமிதாப் பச்சன்.. மேலும் பரவும் விவாகரத்து சர்ச்சை

மருமகள் ஐஸ்வர்யா ராய் பெயரை கூட சொல்லாத அமிதாப் பச்சன்.. மேலும் பரவும் விவாகரத்து சர்ச்சை

0

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் பிரியப்போவதாக தொடர்ந்து செய்தி வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஒன்றாக வராமல் தனித்தனியாக வந்தது இணையத்தில் வைரல் ஆனது.

அமிதாப் பச்சன் குடும்பத்துடன் ஐஸ்வர்யா போட்டோ கூட எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் இடையே இருக்கும் பிரச்சனையை இது உறுதி செய்வது போல அமைத்தது.

தனுஷ் உடன் மோதும் அமலா பால்! ஜெயிக்க போவது யார்

ஐஸ்வர்யா பெயரை சொல்லாத அமிதாப்

அமிதாப் பச்சன் சமீபத்தில் ரிலீஸ் ஆன கல்கி 2898 AD படத்தில் அஸ்வத்தாமன் என்ற ரோலில் நடித்து இருந்தார். இந்த படம் 1000 கோடி வசூலை கடந்து இருக்கும் நிலையில் இது எனக்கு மிகப்பெரிய விஷயம் என அவர் கூறி இருக்கிறார்.

மேலும் கல்கி படம் பற்றி விமர்சனங்கள் பற்றியும் அமிதாப் பேசி இருக்கிறார். “தியேட்டரில் இருந்து வெளியில் வருபவர்களிடம் படம் பார்த்தது எப்படி இருந்தது என கேட்க வேண்டும். அவர்களில் சில youngstersஐ பிடித்து ‘உட்கார்ந்து பேசலாமா’ என சொல்லி படம் பற்றி அவர்கள் என்ன நினைகிறார்கள், அவர்கள் மூலையில் என்ன ஓடுகிறது என தெரிந்துகொள்ள வேண்டும்.”

“நான் அபிஷேக் பச்சன் மற்றும் என் பேத்தி (ஆராத்யா பச்சன்) அகியோரிடம் பேச போகிறேன்” என அமிதாப் கூறி இருக்கிறார்.

அமிதாப் பேசும்போது மகன், பேத்தி பெயர்களை மட்டும் கூறி இருக்கிறார், ஆனால் மருமகள் ஐஸ்வர்யா ராய் பெயரை கூறவில்லை. அதனால் அவர்களுக்கு நடுவில் பெரிய பிரச்சனை இருக்கிறது என நெட்டிசன்கள் பேச தொடங்கி இருக்கின்றனர்.

இதனால் ஐஸ்வர்யா – அபிஷேக் விவாகரத்து பற்றிய செய்திகளும் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version