Home சினிமா தெரு நாய் கடிச்சா அதை பெருசு பண்ணாதீங்க.. நிவேதா பெத்துராஜை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தெரு நாய் கடிச்சா அதை பெருசு பண்ணாதீங்க.. நிவேதா பெத்துராஜை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

0

நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் நாய்களை பாதுகாக்க வேண்டும் என கூறி நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய நிலையில் அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

“ஒரு நாய் கடிக்குதுனா அதை பெரிய விஷயம் ஆக்கி பயத்தை உருவாக்குகிறார்கள். பயத்தை உருவாக்குவதற்கு பதில் அதற்கு தீர்வு கொடுங்கள்.”

“ஒரு நாய் கடிக்கிறது என்றால் அதை மீடியாவில் செய்தியாக சொல்லும்போதே அதற்கு தீர்வையும் சொல்லுங்க. நாயை முற்றிலுமாக ஒழித்துவிடுவது தீர்வு கிடையாது.”

“ஒரு நாய் கடிக்கிறது என்றால் அதில் இருந்து தற்காத்து கொள்ள குழந்தைக்கு கூட சொல்லி கொடுங்க. நாயை புடித்து shelterல் போட சொல்றாங்க. அந்த காசை நாய்க்கு தடுப்பூசி போட பயன்படுத்துங்க. நாயை அரசு பாதுகாக்க வேண்டும், அதற்காக தானே ஓட்டு போடுகிறோம்.”

ட்ரோல்

நாய்களுக்கு மட்டும் ஆதரவாக நிவேதா பெத்துராஜ் பேசி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடுமையாக அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரோட்டில் நடந்து போகிறவர்களுக்கு தான் தெரியும், காரில் செல்பவருக்கு நாய்கள் பிரச்சனை பற்றி என்ன தெரியும் என அவரை நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
 

NO COMMENTS

Exit mobile version