Home இலங்கை சமூகம் பதுளையில் மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

பதுளையில் மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

0

Courtesy: தனா(பசறை)

பதுளை – பசறையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமி ஒருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் நேற்று(31.10.2024) குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் வீடு கட்டுவதற்காக
வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில் மண்வெட்டியுடன் சகோதரனும் சகோதரியும்
நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது குறித்த இருவரும் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது 11
வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் 17 வயதுடைய சகோதரன் மேலதிக
சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிறுமியின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version