Home இலங்கை சமூகம் மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் காயம்

மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் காயம்

0

மன்னார் (Mannar) பெரிய பாலத்தடியில் மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி
பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (20) காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து காவல்துறையினர் 

மேலும், விபத்து நடைபெற்ற இடத்தில் காணப்படும் மோட்டார் சைக்கிளை போக்குவரத்து காவல்துறையினர் பார்வையிட்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நேற்று (19) கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

Source: https://ibctamil.com/article/an-accident-in-mannar-this-morning-one-injured-1726828528

NO COMMENTS

Exit mobile version