Home இலங்கை சமூகம் ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுப் பூனை: தொடரும் விசாரணை

ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுப் பூனை: தொடரும் விசாரணை

0

உரிய அனுமதியின்றி இலங்கைக்கு (Sri Lanka)  கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆபிரிக்க (Africa) காட்டுப் பூனையொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சுங்க அதிகாரிகள்  மேலும் கூறுகையில், இந்த விலங்குகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதாகவும் அதனால் சர்வதேச ரீதியில் இவற்றுக்கு அதிக விலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

கண்டி (Kandy) பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரினால் இந்த விலங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுப் பூனை மக்கள் பார்வைக்காக தெஹிவளை (Dehiwala )மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இலங்கை சுங்கம் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் பல்லுயிர் பாதுகாப்பு, கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version