Home இலங்கை சமூகம் காயங்களுடன் நடமாடித் திரியும் யானை

காயங்களுடன் நடமாடித் திரியும் யானை

0

காயங்களுக்குள்ளான நிலையில் இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில்
காட்டுயானை ஒன்று  ஐந்து நாட்களாக சுற்றித் வருகின்றது. 

கிளிநொச்சி – இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல்
காலில் காயத்துடன் இந்தக்  காட்டுயானை குறித்த பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கை 

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவித்த நிலையில் இரண்டு தடவைகள் வந்து
பார்வையிட்டதாகவும், எனினும் ஐந்து நாட்கள் கடந்த நிலையிலும் அந்த யானை குறித்த பகுதியிலேயே வலம் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை தொடர்பு
கொண்ட போது இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தின்  வடமாகாணத்திற்கு பொறுப்பான
வைத்தியருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version