Home இலங்கை சமூகம் யாழில் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியான பெண்

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியான பெண்

0

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் அனலைதீவு பகுதியில் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில்
ஊர்காவற்றுறை காவல் நிலைய ஆளுகைக்குள் இருக்கும் அனலைதீவு, வட்டாரம் ஐந்தில்
வசிக்கும் ஜஹா சுப்பையா நளினி என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் உறவினரால் ஊர்காவற்றுறை காவல்
நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொடரும் அசாதாரண வானிலையை தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக
மக்கள் பல்வேறு அவலங்களை சந்தித்துவரும் சூழ்நிலையில் நீர் நிலைகளும் நிரம்பி
இருக்கின்ற நிலையில் இவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அந்த பகுதியில் பெரும்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேநேரம் தகவலின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை
ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version