Home சினிமா பல வருடங்களாக காத்திருக்கும் ரசிகர்கள்.. பிரஷாந்தின் அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பல வருடங்களாக காத்திருக்கும் ரசிகர்கள்.. பிரஷாந்தின் அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0

அந்தகன்

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் பிரஷாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் அந்தகன்.

முக்கிய இடத்தில் ஆல்டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்த பிரபாஸின் கல்கி 2898 ஏடி… எவ்வளவு தெரியுமா?

இந்தியில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த அந்தகன். இப்படத்தை தமிழில் தியாகராஜன் இயக்கியுள்ளார்.

ரிலீஸ் தேதி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். அதற்கான போஸ்டரையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்தகன் படத்தை தொடர்ந்து செப்டம்பர் மாதம் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த் நடித்துள்ள GOAT திரைப்படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version