Home இலங்கை சமூகம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மெத்திவ்ஸ் ஓய்வு

டெஸ்ட் போட்டிகளில் இருந்து மெத்திவ்ஸ் ஓய்வு

0

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் (Angelo Mathews) சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்த விளையாட்டின் மீதான காதல் எப்போதும் தீராது என எஞ்சலோ மெத்திவ்ஸ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடக் கிடைத்தமை பெருமிதமானதும் மகிழ்ச்சியானதுமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டி

எதிர்வரும் ஜூன் மாதம் 17 முதல் 21 ஆம் திகதி வரை காலியில், பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8167 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version