Home சினிமா இசையமைப்பாளர் அனிருத் திருமணம் குறித்த அவரது அப்பா சொன்ன விஷயம்… கல்யாணம் எப்போது?

இசையமைப்பாளர் அனிருத் திருமணம் குறித்த அவரது அப்பா சொன்ன விஷயம்… கல்யாணம் எப்போது?

0

அனிருத்

தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்த வண்ணம் உள்ளார்.

அடுத்த இவரது இசையமைப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஜனநாயகன் பட பாடல்கள் வெளியாகவுள்ளது. வரும் டிசம்பர் 27ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெறவுள்ளது.

படத்தில் இடம்பெற்ற 2 பாடல்கள் வெளியாகிவிட்டது, அடுத்தடுத்த பாடல்களை கேட்க ரசிகர்களும் வெயிட்டிங்.

திருமணம்

சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான நாளில் இருந்தே செம பிஸியாக இருக்கும் அனிருத் திருமணம் என்பதை பற்றி மறந்துவிட்டாரா என தெரியவில்லை. இசையமைப்பது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் அனிருத் அப்பாவும், நடிகருமான ரவி ராகவேந்திரா அவரது மகன் திருமணம் பற்றி கூறியுள்ளார். அதில் அவர், இன்று எந்த பையன் அப்பா, அம்மாவிடம் வந்து நீங்கள் பெண் பாருங்கள் என்று சொல்கிறான் சிலர் சொல்லலாம், பலர் பெற்றோர்களிடம் கேட்பதில்லை.

திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்கிறார்களே தவிர, நான் செய்துகொள்ளவா, நீங்கள் பெண் பார்க்கிறீர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. பார்ப்போம் அனிருத் என்போது சொல்கிறார் என்பதை என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version