Home சினிமா கூலி படத்திற்கு இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

கூலி படத்திற்கு இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

கூலி 

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போல் தங்களது எதிர்பார்ப்பை கூலி முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என கலவையான விமர்சனங்களும் முன் வைக்கப்படுகிறது.

அனிருத் சம்பளம்

இந்த நிலையில், கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்த இசையமைப்பாளர் அனிருத், இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கூலி படத்திற்கு இசையமைக்க ரூ. 15 கோடி அனிருத் சம்பளமாக வாங்கியுள்ளாராம். இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://cineulagam.com/article/anirudh-ravichander-coolie-movie-salary-1755170775

NO COMMENTS

Exit mobile version