ரீ ரிலீஸ்
ரீ ரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் பெருகி வருகிறது. இதில் கில்லி, சச்சின் போன்ற படங்கள் மாபெரும் வசூல் வெற்றியடைந்தது.
கடந்த 21ஆம் தேதி விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
அஞ்சான் – அட்டகாசம்
இந்த நிலையில், தற்போது இந்த வாரம் சூர்யாவின் அஞ்சான் மற்றும் அஜித்தின் அட்டகாசம் ஆகிய இரண்டு படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறது. இதில் அஞ்சான் திரைப்படம் ரீ எடிட் செய்து ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது என இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களின் முன் பதிவு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஞ்சான் படம் ரூ. 4 லட்சம் மற்றும் அட்டகாசம் படம் ரூ. 7+ லட்சம் முன் பதிவில் வசூல் செய்துள்ளது.
