மிர்ச்சி செந்தில்
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் மிர்ச்சி செந்தில். இதன்பின் மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் தன்னுடைய இணைந்து நடித்த, கதாநாயகி ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்தார். இந்த காதல் தம்பதிக்கு ஒரு அழகிய மகன் உள்ளார். சமீபத்தில்தான் தங்களது 11வது திருமண நாளை இவர்கள் கொண்டாடினார்கள்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக விஜய் டிவியில் பயணித்து வந்த மிர்ச்சி செந்தில், கடந்த 2023ம் ஆண்டு ஜீ தமிழில் அண்ணா சீரியல் மூலம் காலடி எடுத்து வைத்தார்.
ஸ்ரீலீலா காதல் கிசுகிசு உண்மையா.. திருமணம் பற்றி அவரே கொடுத்த பதில் இதோ
சம்பளம்
தினமும் இரவு 8 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது அண்ணா சீரியல்.
இந்த நிலையில், சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 28,000 சம்பளமாக மிர்ச்சி செந்தில் வாங்கி வருகிறார் என கூறுகின்றனர்.
