Home இலங்கை சமூகம் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அன்னை பூபதியின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அன்னை பூபதியின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்

0

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து
தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்கள் யாழ்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றன.

 அஞ்சலி நிகழ்வுகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் (19.04.2025) 37ஆவது ஆண்டு அஞ்சலி
நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது அக வணக்கம் செலுத்தப்பட்டு, அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு
சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், அன்னை பூபதி தொடர்பான
நினைவுரையும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள்
முன்னெடுக்கப்பட்டன.

NO COMMENTS

Exit mobile version