Home இலங்கை சமூகம் பல உயிர்களைக் காப்பாற்றிய செந்தில் தொண்டமான்! அண்ணாமாலை வாழ்த்து

பல உயிர்களைக் காப்பாற்றிய செந்தில் தொண்டமான்! அண்ணாமாலை வாழ்த்து

0

நேபாளம்- காத்மாண்டுவில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பல உயிர்களைக் காப்பாற்றிய செந்தில் தொண்டமானுக்கு பா.ஜ.க.வின் துணைத் தலைவரான அண்ணாமாலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்தோடு, செந்தில் தொண்டமான் நரகத்தில் சிக்கிய பல குடும்பங்களைக் காப்பாற்ற அவர் விரைவாகத் தலையிட்டு, உண்மையான தலைமைத்துவத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டு

அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செந்தில் தொண்டமானின் வீரச் செயல், அவரது தனிப்பட்ட நேர்மையையும், உண்மையான தலைமைத்துவத்தை வரையறுக்கும் சேவை மனப்பான்மையையும் பிரதிபலிக்கும் மிக உயர்ந்த பாராட்டுகளுக்கு தகுதியானது.

அவரது இந்த வீரதீரச் செயல், கடமை, இரக்கம் மற்றும் பிறரின் நலனுக்கான அச்சமற்ற அர்ப்பணிப்பு ஆகிய உன்னத மதிப்புகளைப் பேண பலரை ஊக்குவிக்கட்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version