Home முக்கியச் செய்திகள் இரா.சம்பந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்

இரா.சம்பந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் (R. Sampanthan) இறுதி அஞ்சலி நிகழ்வில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை (Annamalai) கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) திருகோணமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ள நிலையில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மு.க.ஸ்டாலின் வருகை

இந்நிலையில், அண்ணாமலை தனது வரவை தன்னிடம் தொலைபேசி மூலம் உறுதிசெய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் (M. K. Stalin), இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளபோதும், அது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் சிறீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/annamalai-to-attend-sampanthan-s-funeral-1720103976?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version