Home இலங்கை சமூகம் யாழில் தொழில் தேடுவோருக்கு வெளியான அறிவிப்பு

யாழில் தொழில் தேடுவோருக்கு வெளியான அறிவிப்பு

0

தொழிற் சந்தையை தொழில் தேடுவோர் தமக்கானதாக்கி வெற்றிகொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட மேலதிக அரச
அதிபர் ஸ்ரீமோகன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(08.03.2025) நடைபெற்ற தொழிற் சந்தை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“யாழ். மவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து, தத்தமது கல்வித்
தகுதிக்கேற்ப தொழில் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகள் இந்த தொழிற்
சந்தையை தமக்கானதாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தீர்வை பெற்றுக் கொடுக்கும் களம்

தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழில் தேடுவோரை ஒன்றிணைத்து இளைஞர் யுவதிகளின்
தொழிற் தேடுதலுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் களமாக இந்த நிகழ்வு
அமைந்துள்ளது.

இதை எமது பகுதி தொழில் தேடுநர்கள் தமது எதிர்காலம் கருதியதாக பயன்படுத்தி
வெற்றிகாண வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் – தீபன்

NO COMMENTS

Exit mobile version