Home இலங்கை சமூகம் முத்தையன்கட்டு குள பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

முத்தையன்கட்டு குள பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

முத்தையன்கட்டு குளத்தின் வான்பாயும் பகுதியின் இருபக்கமும்
காணப்படும் வான்பாயும் நீரை சீராக்கும் கட்டில் ஏற்பட்டுள்ள
உடைப்பினை சீர் செய்வதற்காக,நீர்பாசன திணைக்களம் பாதுகாப்புப் படைகள்,
விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் திருத்தப் பணிகளை
ஆரம்பித்துள்ளது.

தற்போதைய மழையின் காரணமாக குளம் நிரம்பிய நிலையில் காணப்படுவதனால், நீரினை
வெளியேற்றிகொண்டு நிரந்தரமான கட்டுமானப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தற்காலிகமாக வான் பகுதியில் உடைப்பெடுத்த பக்கமாக நீர்
வெளியேறுவதனை தடுப்பதற்காக வான்பாதையின் ஒருபகுதி மண் மூட்டைகளால்
மறிக்கப்பட்டு, இரண்டு கதவுகள் திறக்கப்பட்டு குளத்தின் நீர்மட்டம்
குறைக்கப்பட்டு வருகிறது.

அச்சமடைய வேண்டாம்

நாளையும் மறுநாளும், நிலைமை சாதகமாக இருந்தால், மேலதிக புனருத்தாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

முத்தையன்கட்டு குளத்தில் தற்போதுவரை எந்தவித ஆபத்தான நிலையும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குளத்தின் கீழ் பகுதியில் (Downstream) வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து
கனமழை இல்லாதபடியால் குளத்தினால் எதுவித ஆபத்தான நிலமையும் இல்லை என்பதனை
திணைக்களம் உறுதிப்படுத்துகிறது.

எனவே, பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.
தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version