Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

0

190,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த ஏல விற்பனைஎதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஏல விற்பனை

இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/announcement-of-the-central-bank-of-sri-lanka-1719792937

NO COMMENTS

Exit mobile version