Home இலங்கை சமூகம் நீர் பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

நீர் பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

0

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவும் வெப்பமான வானிலையினால் நீரின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது.

எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை

இதேவேளை, வெப்பநிலையானது எதிர்வரும் நாட்களில் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் உடலுக்கு தேவையான அளவு நீரைப் பருக வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version