Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு

0

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணையான சுமார் 350 மில்லியன் அமெரிக்க
டொலர்களை இரண்டு வாரங்களுக்குள் இலங்கை விரைவாக பெறும் என்று சர்வதேச நாணய
நிதியம் அறிவித்துள்ளது.

நிதியமைச்சகத்தில் நடைபெற்ற உயர் மட்ட சந்திப்பின்போது சர்வதேச நாணய
நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் இதனை அறிவித்தார்.

டித்வா சூறாவளியின் பின்விளைவு

டித்வா சூறாவளியின் பின்விளைவுகளை மதிப்பிடுவது, தேசிய நிவாரணம், மீட்பு
மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பது என்பவற்றை
நோக்காகக் கொண்டு, உயர் மட்ட நன்கொடையாளர் அமர்வை நிதியமைச்சு நேற்று கூட்டியது
இதன்போதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version