Home ஏனையவை ஆன்மீகம் யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம்

யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம்

0

யாழ்.நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று (
15) 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அம்பாளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

வருடாந்த திருவிழா

மூன்று மூர்த்திகளும் கொடிக்கம்பம் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க
பிராமண ஆச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா
கோஷத்துடன் நைனாதீவு நாக பூசணி அம்மனுக்கு கொடியேற்றம் இனிதே இடம்பெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்கள் இருந்தும்
பக்தர்கள் வருகை தந்து நைனை நாகபூசனி அம்மனை பக்தி பூர்வத்துடன் வழிபட்டதை
காணக்கூடியதாக இருந்தது.

15 தினங்களை கொண்ட இவ்வாலாய மகோற்சவத்தில் (14ம் நாள்) 28 ஆம் திகதி
இரதோற்சவமும், ( 15 ம் நாள்) 29ஆம் திகதி காலை தீர்த்தோற்சவமும், அன்றைய தினம்
மாலை திருவூஞ்சலும் நடைபெற உள்ளது.

Source: https://tamilwin.com/article/annual-festival-of-sri-nagapushani-amman-temple-1781535112

NO COMMENTS

Exit mobile version