Home இலங்கை சமூகம் இலங்கையில் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து கையடக்க தொலைபேசிகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

முறையான தரநிலைகள் இல்லாமல் நாட்டிற்குள் தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதற்கு இனி எந்த வாய்ப்பும் இல்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத்(Bandula Herath) தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இனிமேல், தொடர்புடைய தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கையடக்க தொலைபேசி

வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் முடிவடைவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.

அதற்கமைய, தற்போது செயலில் உள்ள சாதனங்களில், தங்கள் IMEI எண்களைப் பதிவு செய்யாதவை, எதிர்காலத்தில் தொலைபேசி வலையமைப்பின் செயலில் செயற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் IMEI எண்களைப் பதிவு செய்த வலையமைப்பிற்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது என நாயகம்  மேலும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்கு தகவல் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை நிறுத்துவதே இதன் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையினால் தற்போது பாவனையிலுள்ள உள்ள கையடக்க தொலைபேசிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version