அனுராதபுரம், திரப்பனே, கல்குலம பகுதியில் அடையாளம் தெரியாத
துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில்
காயமடைந்தவர் சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மிஹிந்தலையைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
