Home இலங்கை சமூகம் சிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்!

சிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்!

0

சிறைச்சாலைத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் பலருக்கும் அவர்கள் பணியாற்றி இடங்களில் இருந்து அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறப்பு தர கண்காணிப்பாளர்கள், ஒரு கண்காணிப்பாளர், எட்டு உதவி
கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐந்து சிறைச்சாலைகளின் பதில் கண்காணிப்பாளர்கள்
ஆகியோர், தற்போது அவர்கள் பணிபுரியும் இடங்களிலிருந்து வேறு
சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்
தெரிவித்துள்ளது.

எனினும் வடக்கு கிழக்கின் சிறைச்சாலை அதிகாரிகளில் மாற்றங்கள்
மேற்கொள்ளப்படவில்லை.

இடமாற்றங்கள்

இந்த இடமாற்றங்கள் 2025 ஜூலை 02 முதல் நடைமுறைக்கு வருகின்றன. 

அதன்படி, சிறப்பு தர சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஏ.சி. கஜநாயக்க – போகம்பரை
சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை தலைமையகத்திற்கு மாற்றப்படுகிறார்.

சிறப்பு தர சிறைச்சாலை கண்காணிப்பாளர் டி.ஆர்.எஸ். சில்வா – மஹர
சிறைச்சாலையிலிருந்து வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றப்படுகிறார்.

செயல்பாட்டு சிறைச்சாலை கண்காணிப்பாளர் சுதன் ரோஹன – கொழும்பு விளக்கமறியல்
சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் எல்.பி. வர்ணகுலசூரிய – வாரியபொல
சிறைச்சாலையிலிருந்து போகம்பர சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் வி. அபேதீர – கேகாலை சிறைச்சாலையிலிருந்து
வாரியபொல சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் கே. டெப் – களுத்துறை சிறைச்சாலையிலிருந்து
பூசா சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் பி. பிரேமதிலக – இலங்கை சிறைச்சாலை அவசர
நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையிலிருந்து அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் பி. பெரேரா – பல்லேகலை சிறைச்சாலையிலிருந்து
மெகசின் சிறைக்கு இடமாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஏ. உதயகுமார – பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து
களுத்துறை சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் என். உபுல்தெனிய என்ற பதவி இடைநீக்கம்
செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துசார உப்புல்தெனியவின் சகோதரர் –
மகசின் சிறைச்சாலையிலிருந்து வடரேக திறந்தவெளி சிறை முகாமுக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆர். பிரபாத் – வீரவில திறந்தவெளி சிறைச்சாலை
முகாமிலிருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஏ. ராஜகருணாநாயக்க – சிறைச்சாலை
தலைமையகத்திலிருந்து இலங்கை சிறைச்சாலை அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப்
படைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிரதீப் வசந்த குமார – வட்டரேக திறந்தவெளி
சிறை முகாமிலிருந்து மாத்தறை சிறைக்கு இடமாற்றப்படுகிறார்.

  

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் என்.பெர்னாண்டோ – அகுனுகொலபெலஸ்ஸ
சிறைச்சாலையிலிருந்து வீரவில சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் மங்கள வெலிவிட்ட – மாத்தறை
சிறைச்சாலையிலிருந்து பல்லேகலை சிறைக்கு மாற்றப்படுகிறார்.

உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் குமார எதிரிசிங்க – மஹர சிறைச்சாலையிலிருந்து
கேகாலை சிறைச்சாலைக்கு இடமாற்றப்படுகிறார்.

மேலதிக தகவல்-அனதி

NO COMMENTS

Exit mobile version