Home இலங்கை அரசியல் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

0

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட
தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின் விசாரணையில் செல்வாக்கு செலுத்த பிரதி அமைச்சர் ஒருவர்
முயன்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல குற்றம் சுமத்தியுள்ளார்.

தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க இந்த பிரதி அமைச்சர் கிராண்ட்பாஸ் பொலிஸாரை
தொடர்பு கொண்டார் என்பது தமக்கு தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணை

இதனடிப்படையில், ஜனநாயக விதிமுறைகளை அரசாங்கம் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் இந்த நிர்வாகத்தால் ஜனநாயகம் ஓரங்கட்டப்பட்டதாகவே தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் கொழும்பு மாநகர சபையில், எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக
உறுதியளித்த ஆறு உறுப்பினர்கள் மீது தேசிய மக்கள் சக்தி அழுத்தம்
கொடுத்ததாகவும், இதனால் அவர்கள் கடைசி நிமிடத்தில் தங்கள் நிலைப்பாட்டை
மாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் குறித்து பேசிய உலுவிடகே மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தலதா
குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version